ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கத்திற்கென விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது இதனை நடைமுறைப்படுத்துவதற்கே இந்த விசேட குழு அமைக்கப்படவுள்ளது. பிரதமரால் இதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவை மாநாட்டில், பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் குறித்த பரிந்துரைகளை அமுலாக்குவதற்காகவும், அமுலாக்கத்தை கண்காணிப்பதற்காகவும் இந்த விசேட குழு நியமிக்கப்படுன்றமை இங்கு குறிப்பிடத்தக்கது