இலங்கையின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக 10கோடி அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியின் மூலம் உயர் கல்வி பெறும் மாணவர்கள் பெரிதும் நன்மை அடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக வங்கியினால் 115 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் இலங்கை 88ஆவது நாடாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.