Posted by plotenewseditor on 24 June 2017
Posted in செய்திகள்
இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை தமிழர் பகுதிகளில் நிறுவும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக கடந்த 16.06.2017 அன்று முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் VGP நிறுவனத்தின் தலைவர் உட்பட சுமார் 30 பேர் வரையில் தமிழகத்தில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டிருந்தனர். மேலும் வடமாகாண சபையின் முல்லை மாவட்ட உறுப்பினரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளருமான க.சிவநேசன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கு பற்றியிருந்தனர். நிகழ்வில் திருவுருவச்சிலை குறித்த நினைவுக்கல் பதித்தல், விழாவுக்கு வருகைதந்திருந்த பிரமுகர்களுக்கான விருந்தோம்பல் ஆகியவற்றுக்கான செலவினை சுவிஸ் நாட்டிலிருந்து புளொட் தோழர்கள் செல்வபாலன், மனோ, தீபன், ராஜேந்திரம் ஆகியோர் பொறுப்பேற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Mu/Vidyananda College – National School ,Mulliyawalai
Estd: 17.01.1951 Email: muvidyananda@gmail.com
22.6.2017.
மு/வித்தியானந்த கல்லூரி – தேசிய பாடசாலை,
முள்ளியவளை :22.6.2017.
அன்புடையீர்
திருவள்ளுவர் திறப்பு விழா அன்பளிப்பு
தங்களால் கௌரவ வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு க சிவநேசன் அவர்கள் ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட ரூபா 50000.00 இற்காக பாடசாலை சமூகத்தின் மேலான நன்றிகளை முதற்கண் அறியத்தருகின்றோம்.
இவ் உதவியானது மேற்படி விழாவை சிறப்பாக நடாத்த மிகவும் பேருதவியாக அமைந்தது.
இதன் மூலம் 1. சிலைக்கான நினைவுக்கல் கொள்வனவு,
2. விருந்தினர் மற்ரும் இந்தியாவிலிருந்து வருகைதந்த பெரியோருக்கான உணவு, இதர
விழாச்செலவுகளுக்காகவும் செலவு செய்யப்பட்டது என்பதை
உறுதிப்படுத்துகின்றேன்.
பெ.க.சிவலிங்கம்,
அதிபர்,
மு/வித்தியானந்த கல்லூரி,
முள்ளியவளை.