ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறியதன் பின்னரும் தமது நாட்டு சந்தையில் இலங்கைக்கான வரிச்சலுகை, தொடரும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து பெருந்தொகையான ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட பொருட்கள் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதற்காக வழங்கப்படுகின்ற வரிச்சலுகை அல்லாத பட்சத்தில், இலங்கையின் உற்பத்திகள் 10 சதவீத இலாப இழப்பை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதன் பின்னரும் இந்த வரிச்சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.