sdf100 நாட்களுக்கும் மேலாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட கேப்பாப்பிலவு மக்கள் தமது போராட்டத்தை இன்று கொழும்பில் முன்னெடுத்திருந்தனர். பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள கேப்பாப்பிலவு கிராமத்தை விடுவிக்கக்கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பை கேப்பாப்பிலவு மக்களும் சம உரிமை இயக்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். கேப்பாப்பிலவு உள்ளிட்ட வடக்கில் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். எவ்வாறாயினும், அவர்கள் லோட்டஸ் சந்தி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், கலந்துரையாடலுக்காக சிலர் அழைத்துச் செல்லப்பட்டனர். ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி செயலாளர் சமந்தி ரணசிங்கவுடன் கலந்துரையாடியதாக அந்த மக்கள் குறிப்பிட்டனர்.