புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்களும், ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். டியுனீசியா, ஸ்பெயின் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும், சீஷெல்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகரும் இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி நெஜமேடின் லகால் டியுனீசியாவின் தூதுவராகவும், ஜோஸ் ரமோ பரணனோ பெர்னாண்டஸ் ஸ்பெயினின் தூதுவராகவும், அர்ச்சில் டிஸ{வாஸில் ஜோர்ஜியா நாட்டு தூதுவராகவும் மற்றும் கொண்ட்ரட் மெடெரிக் சீஷெல்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகராகவும் இலங்கையில் தமது கடமைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.