பேஸ்புக் ஊடாக நபர்களிடம் நிதி மோசடி செய்த 25ற்கும் அதிகமான வெளிநாட்டவர்களை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நைஜீரியா மற்றும் உகண்டா நாடுகளைச் சேர்ந்தவர்ளே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் நீர்கொழும்பு கல்கிஸ்ஸ தெகிவளை, காலி மற்றும் மாலம்பே ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக தங்கியிருந்து மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது. பேஸ்புக் ஊடாக நண்பர்களை இணைத்துக்கொண்டு அவர்கள் மூலம் சுமார் 500 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மோசடி குறித்து இதுவரை 15ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.