நாடு முழுவதும் 684 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் பாதுகாப்பற்ற 200 ரயில் கடவைகளுக்கு சமிஞ்சை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இனங்காணப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கும் இந்த சமிஞ்சை விளக்கை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை கடந்த 27 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது ரயில் மூடப்பிட்டிருந்த சந்தர்ப்பத்தில் ரயில் கடவைகளில் பயணித்த 29 பேருக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் விபத்துக்கள் அதிகரித்துள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் இந்த சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்கு 26 குழுக்களை நியமித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.