வடமாகாண சபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கலாநிதி சர்வேஸ்வரனும் சமூக சேவைகள், மகளிர் விவகாரம் மற்றும்புனர்வாழ்வு அமைச்சராக அனந்தி சசிதரனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள். கல்வி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சர்களான குருகுலராஜா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டமையினை தொடர்ந்தே இவ்விரு பதவிகளுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி 3 மாதங்களுக்கு இவர்கள் தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விவசாய, கால்நடை அமைச்சராக தொடர்ந்து கடமையாற்றவுள்ளார். இவர்கள் மூவரும் இன்றுகாலை 10மணியளவில் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே முன்பாக பதவியேற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.