americaகொழும்பு நகரின் முச்சக்கர வண்டிகளில் தனிமையில் பயணிக்க வேண்டாம் என கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரகம் இலங்கைக்கு வருகை தருகின்ற அமெரிக்கப் பெண்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இந்நாட்டு, முச்சக்கரவண்டி சாரதிகளினால் பெண்கள் பல்வேறு வகையான பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, விசேடமாக இரவு நேரங்களில் முச்சக்கரவண்டிகளில் பயணம் செய்யும் போது, தமது பயண விபரங்கள் தொடர்பில் உறவினர்களுக்கு அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கொழும்பில் உள்ள முச்சக்கரவண்டியொன்றில் ஏறுவதற்கு முன்னர் அதன் சாரதி மற்றும் வாகன இலக்கத்தை புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறும் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் அமெரிக்க பெண்கக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மேலுமொரு ஆலோசனையும் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.