கொழும்பு-02, கொம்பனிதெரு சந்தியில், நிப்போன் ஹொட்டலுக்கு அண்மையில் உள்ள கடைத்தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் தீயணைப்பு வாகனங்கள் மூன்றும், தீயணைப்பு படையினர் 12பேரும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.