அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காவிடின் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் மத்திய செயற்குழு நேற்று கூடிய பின்னர் ஐந்து கோரிக்கைகளை அவர்கள் அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளனர். சைட்டம் நிறுவனத்திற்கு தொடர்ந்து மாணவர்களை இணைத்துக்கொள்வதை நிறுத்துதல், பட்டம் வழங்குவதை உடனடியாக நிறுத்துதல் போன்ற கோரிக்கைகளும் இதில் அடங்கும்.