Header image alt text

aSAsநாடு முழுவதும் 684 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் பாதுகாப்பற்ற 200 ரயில் கடவைகளுக்கு சமிஞ்சை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இனங்காணப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கும் இந்த சமிஞ்சை விளக்கை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். Read more

sdfdfவடமாகாண சபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கலாநிதி சர்வேஸ்வரனும் சமூக சேவைகள், மகளிர் விவகாரம் மற்றும்புனர்வாழ்வு அமைச்சராக அனந்தி சசிதரனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள்.  Read more

UGCபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, அடுத்த மாதம் 7ம் திகதிவரை இந்தக் கால எல்லையை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.  Read more

ranilபுதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில், நேற்று இடம்பெற்ற அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். பிரதமர் அங்கு அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், Read more

dபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்களும், ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். Read more

mahinda desapriya (3)உள்ளூராட்சித் தேர்தல் சட்டம் சம்பந்தமான தொழில்நுட்பப் பிரச்சினைகள், ஜூலை மாதத்துக்குள் தீர்க்கப்படுமாயின், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, இவ்வாண்டு இறுதிக்கும் நடத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுத் தெரிவித்தது. நேற்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சந்தித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் உள்ளன என்றும் தெரிவித்தார். Read more

facebookபேஸ்புக் ஊடாக நபர்களிடம் நிதி மோசடி செய்த 25ற்கும் அதிகமான வெளிநாட்டவர்களை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நைஜீரியா மற்றும் உகண்டா நாடுகளைச் சேர்ந்தவர்ளே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

xcvxசுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான ஆதரவினை கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் வழங்கி வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி சுகாதார தொண்டர்களும் கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர் போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார தொண்டர்கள் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி சுகாதாரத் தொண்டர்கள் ஆகிய நாம் நாளைய தினம் வடமாகாண ஆளுனரை சந்திக்க உள்ளோம் அவர் எமக்கு சுமூகமான பதிலை அளிக்காவிட்டால் எமது கவனயீர்ப்புப் போராட்டம் தீர்வு கிடைக்கும் அவரை தொடரும் எனத் தெரிவித்தனர். அத்துடன் தாம் 1992, 1997 களில் இருந்து பலதரப்பட்ட கஷ்டங்களின் மத்தியில் தொண்டர்களாக பணிபுரிவதாகவும் தமக்கான நியமனங்களை சம்பந்தப் பட்டவர்கள் பெற்றுத் தாருங்கள் எனக் கோரிக்கையும் விடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

krishantha de silvaஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஸாந்த சில்வா, ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு பாதுகாப்பு படையணிகளின் பிரதானி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயுதம் தாங்கிய படையணிகளின் சேனாதிபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017ஆம் ஆண்டு ஜீன் மாதம் 27ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த ஜெனரல் பதவி உயர் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

kilinochchiகிளிநொச்சி மாவட்டத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2,892 மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்து வருவதுடன் இவர்களில் 283 பேர், தமது பார்வையை இழந்த நிலையில் உள்ளனர் என்றும், கிளிநொச்சி மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 95 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டம், பலமுறை இடப்பெயர்வுடன் கூடிய பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளது. Read more