Header image alt text

UNஅரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அது குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஜெனிவா மனித உரிமை பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

அத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை பரவலாக்கும் முறை மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அரசியலமைப்பு சட்டவாக்க சபையின் செயற்பாடுகள் அரசியல் ரீதியாக இருக்கக் கூடாது எனவும் மனித உரிமை பேரவை குறிப்பிட்டுள்ளது. இதனைத் தவிர அரசியலமைப்பு மக்களின் அடிப்படை உரிமைகளையும் அரசியல் உரிமைகளையும் பாதுகாத்துள்ளதா என்பதை மீண்டும் ஆராயுமாறும் மனித உரிமை பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

wrerereகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகமும், கிளிநொச்சி சமூர்த்தி அபிவிருத்தி வங்கியும் இணைந்து சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். நேற்றுக் காலை கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கரைச்சி பிரதேச செயலக முன்றலை சென்றடைந்தது.

அங்கு மாதிரி சிகரட் மற்றும் மது போத்தல் என்பன எரிக்கப்பட்டு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் புகைத்தல் மற்றும் போதைப் பாவனைக்கு எதிரான வாசங்களும் எழுதப்பட்டிருந்தது. இதில் கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன், கிளிநொச்சி வாழ்வின் எழுச்சி திணைக்கள உதவிப் பணிப்பாளர், மதகுருமார்கள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

wdeயாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடம் மற்றும் விவசாய பீடங்களின் புதிய கட்டிடத் தொகுதிகள் நேற்று திறந்து வைக்கப்படடுள்ளன. உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, இந்திய தூதுவர் தரன்ஜித் சிங்கா சண்டு, வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே ஆகியோர் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர். Read more

sdsaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய செயலாளராக ஒஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக மூன்று தினங்களுக்குள் தமக்கு நியமனம் கிடைக்கும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ அபேகோன் தன்னுடைய பதவியை, நேற்று இராஜினாமா செய்திருந்த நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்குள், ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கவுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ இன்று தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டபோது, பி.பீ அபேகோன், ஜனாதிபதி பொறுப்பேற்றிருந்தார்.

lanka japanஇலங்கையில் காலநிலை நிலைமைகளை ராடர் கருவிமூலம் கண்டறியும் வலைப் பின்னல் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே கைச்சாத்தாகியுள்ளது.

ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு அமைப்பிற்கும் இலங்கைக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தின்படி, 340 கோடி ரூபாய் பெறுமதியான இந்த வலையமைப்புத் தொகுதி காலநிலை அவதான நிலையத்திடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தம் தொடர்பான தகவல்களை இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம் முன்கூட்டியே பெற்று அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

tajudeenபிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பில், கொழும்பின் நீதித்துறை முன்னாள் பிரதம மருத்துவ அதிகாரி ஆனந்த சமரகோனை, இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் விசாரணைக் குழு, சந்தேகநபராக இனங்கண்டுள்ளது.

இதன்பிரகாரம், நீதித்துறை முன்னாள் பிரதம மருத்துவ அதிகாரியின் அங்கத்துவம், 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினால், இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. Read more