ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய செயலாளராக ஒஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக மூன்று தினங்களுக்குள் தமக்கு நியமனம் கிடைக்கும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ அபேகோன் தன்னுடைய பதவியை, நேற்று இராஜினாமா செய்திருந்த நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்குள், ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கவுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ இன்று தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டபோது, பி.பீ அபேகோன், ஜனாதிபதி பொறுப்பேற்றிருந்தார்.