UNஅரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அது குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஜெனிவா மனித உரிமை பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

அத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை பரவலாக்கும் முறை மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அரசியலமைப்பு சட்டவாக்க சபையின் செயற்பாடுகள் அரசியல் ரீதியாக இருக்கக் கூடாது எனவும் மனித உரிமை பேரவை குறிப்பிட்டுள்ளது. இதனைத் தவிர அரசியலமைப்பு மக்களின் அடிப்படை உரிமைகளையும் அரசியல் உரிமைகளையும் பாதுகாத்துள்ளதா என்பதை மீண்டும் ஆராயுமாறும் மனித உரிமை பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.