udaya gammanvilaமேலும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரட்டைக் குடியுரிமையினை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் தம்வசம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்வசம் உள்ள தகவலுக்கு அமைய அமைச்சர் ஒருவர் சுவிஸ்சலாந்துடனான இரட்டைக் குடியுரிமையை கொண்டுள்ளதாகவும், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனடா இரட்டைக் குடியுரிமையினையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தவிர, இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நோர்வே குடியுரிமையினையும், மேலும் ஒருவர் ஜேர்மனி குடியுரிமையினையும் கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமை தொடர்பான தகவல்களை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க தவறும் பட்சத்தில், தாம் இந்த விபரங்களை மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.