Header image alt text

DSC0749228வது வீரமக்கள் தினம் எதிர்வரும் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30அளவில் சுவிஸின் GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich  என்னுமிடத்தில் சுவிஸ் புளொட் தோழர்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூருமுகமாக மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் வினோதவுடைப்போட்டி, நடன நாட்டியங்கள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. இத்தினத்தை முன்னிட்டு அன்று காலை இதே மண்டபத்தில் தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் சுவிஸ்வாழ் தமிழ்ப் பிள்ளைகளுக்கான போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு பிள்ளைகளுக்கான பரிசில்கள் வீரமக்கள்தின நிகழ்வின்போது வழங்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

sdfdsfdசீசெல்ஸில் அமைந்துள்ள இலங்கையின் தூதரகத்தை மடகஸ்காருக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கையை வர்த்தக ராஜதந்திர ரீதியில் கொண்டு செல்லும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் அதிகளவான வெளிநாட்டு முதலீடுகளை கவரமுடியும் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. சீசெல்ஸில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் தூதரகம் திறக்கப்பட்டது. இதேவேளை போலந்தின் தூதரகத்தை மூடி செக்கொஸ்லோவேக்கியாவில் புதிய தூதரகம் ஒன்றை திறக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

strikeரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மின்சார ரயில் தரிப்பிடத்தில் பணியாற்றும் பரிசோதகர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒத்துழைப்புச் சங்க பொருளாளர் காமினி ஜயதிலக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர கருத்துக் கூறுகையில், பணிப்பகிஷ்கரிப்பு குறித்து தமக்கு தெரியவரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதாக அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

electionமாகாண சபை ஒன்றில் உத்தியோகபூர்வ காலம் முடிவடைந்ததன் பின்னர் புதிய தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இருப்பதாக கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா கூறியுள்ளார்.

உத்தியோகபூர்வ காலம் முடிவடைந்த மாகாண சபையின் காலத்தை நீடிக்க வேண்டுமாயின் அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

swiss bankசுவிஸ் வங்கியில் இலங்கையர்களுக்கு சொந்தமான 307 மில்லியன் சுவிஸ் பிராங் பணம் இருப்பதாக அந்த நாட்டின் தேசிய வங்கியின் 2016ம் ஆண்டுக்கான புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை 151வது இடத்தில் உள்ள அதேவேளை பிரித்தானியா முதலிடத்தில் உள்ளது. சுவிஸ் வங்கியில் இந்தியர்களால் பேணப்பட்டு வந்த கணக்குள் சில நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்தப்பட்டியலில் இந்தியா 88வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. Read more

rohithaகிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக, ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே,

போகொல்லாகமவை நியமிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். சட்டத்தரணியான ரோஹித்த போகொல்லாகம, இலங்கையின் முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

retrrகொழும்பு வெள்ளவத்தைக் கடற்பரப்பில் மீனவ படகொன்று கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று காலை 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அந்த படகில் 4 அல்லது 5 பேர் அளவில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த படகில் சென்ற இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.

motor bombsவவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் இருந்து வெடிக்காத நிலையில் 4 மோட்டார் குண்டுகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கனகராயன்குளம் மன்னகுளம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டுவதற்காகச் சென்றவர்கள் அப்பகுதியில் வெடிக்காத நிலையிலிருந்த 4 மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர். Read more

kapila waidyaratneபாதுகாப்பு செயலாளராக சிரேஷ்ட மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை புதிய இராணுவத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமனம் பெற்றுக்கொண்டார். அவர் இதுவரை காலமும் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியாக செயற்பட்டு வந்தார்.

கபில வைத்தியரத்ன கடந்த ஆண்டு சட்டமா அதிபர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். எனினும், 2014ல் பிஜி மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவதற்காக, சேவையிலிருந்து இடைவிலகிச் சென்றிருந்த காரணத்தினால் அவருக்கு சட்டமா அதிபர் பதவியைப் பெறும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கபில வைத்தியரத்ன, 1998 தொடக்கம் 2003 வரையான காலப்பகுதியில், அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில் யூகோஸ்லாவியாமீது நடத்தப்பட்ட விசாரணையில் சட்டவாளராகப் பணியாற்றியிருந்தார்.