சீசெல்ஸில் அமைந்துள்ள இலங்கையின் தூதரகத்தை மடகஸ்காருக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கையை வர்த்தக ராஜதந்திர ரீதியில் கொண்டு செல்லும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் அதிகளவான வெளிநாட்டு முதலீடுகளை கவரமுடியும் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. சீசெல்ஸில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் தூதரகம் திறக்கப்பட்டது. இதேவேளை போலந்தின் தூதரகத்தை மூடி செக்கொஸ்லோவேக்கியாவில் புதிய தூதரகம் ஒன்றை திறக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.