swiss bankசுவிஸ் வங்கியில் இலங்கையர்களுக்கு சொந்தமான 307 மில்லியன் சுவிஸ் பிராங் பணம் இருப்பதாக அந்த நாட்டின் தேசிய வங்கியின் 2016ம் ஆண்டுக்கான புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை 151வது இடத்தில் உள்ள அதேவேளை பிரித்தானியா முதலிடத்தில் உள்ளது. சுவிஸ் வங்கியில் இந்தியர்களால் பேணப்பட்டு வந்த கணக்குள் சில நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்தப்பட்டியலில் இந்தியா 88வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பங்களாதேஷ் 89வது இடத்தையும், நேபாளம் 150வது இடத்தையும், பூட்டான் 282வது இடத்தையும் பிடித்துள்ளன. அபிவிருத்தியடைந்த நாடுகளின் சுமார் 824 பில்லியன் சுவிஸ் பிராங் இருப்பதாகவும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் 208 மில்லியன் சுவிஸ் பிராங் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலகெங்கிலுமுள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கியில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தின் அளவில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அது 1.41 ட்ரில்லியன் சுவிஸ் ப்ராங்கில் இலிருந்து 1.42 ட்ரில்லியன் வரை அதிகரித்துள்ளது என்றும் 2016ம் ஆண்டுக்கான புதிய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.