Header image alt text

vavuniya veeramakkal thinam 13.07 (1)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் எதிர்வரும் 13ம் திகதி வியாழக்கிழமை முதல் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையிலான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. Read more

sdfdsகட்டாருக்கான இலங்கை தூதுவர் பதவியில் இருந்து விலக ஏ.எஸ்.பி லியனகே தீர்மானித்துள்ளார். கொழும்பில் உள்ள அவருக்கு சொந்தமான பீக்கொக் மாளிகையில், இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமக்கு தூதுவர் பதவி தேவையில்லை என்றும் அதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமக்கு இலங்கையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் ஏ.எஸ்.பி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

sfdமீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை மீனவத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு படகுகள், கப்பல் ஒன்றில் மோதியதால் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சிக்கிய ஒரு படகில் இருந்த மீனவர்களை, அருகிலிருந்த மற்றுமொரு படகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். Read more

sddsதொழில் நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவகத்துக்கு (சைட்டம்) எதிர்ப்புத் தெரிவித்து, இன்றுஇடம்பெறவிருந்த போராட்டத்தை பிற்போட்டமைக்கு முக்கிய காரணம், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இடம்பெற்ற இணக்கமான பேச்சுவார்த்தை என,

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார் மேலும், மதத்தலைவரின் கோரிக்கையையும் கருத்தில் கொண்டே தீர்மானத்தை எடுத்துள்ளதாக, நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்தார்.

missingயாழில் தனது மகனைக் காணவில்லை என, தாயார் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கிறேசியன் பிரேமிளன் (வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நாவாந்துறையில் மேசன் வேலைக்காக சென்ற அவர், மாலை வேலை முடித்துவிட்டு வீடு செல்வதாக கூறியுள்ளார். Read more

maha nayakkaபுதிய அரசியலமைப்பு நாட்டுக்கு தேவையில்லை என, இலங்கையிலுள்ள மூன்று பௌத்த மத பீடங்களுக்கான மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர். நேற்றுமாலை சந்திப்பொன்றை மேற்கொண்ட அவர்கள், ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது.

தற்போதுள்ள அரசியலமைப்பை அவ்வாறே தொடர்ந்தும் பேணுவது பொருத்தமானது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். எனினும், தேர்தல் முறையை மட்டும் மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.