maha nayakkaபுதிய அரசியலமைப்பு நாட்டுக்கு தேவையில்லை என, இலங்கையிலுள்ள மூன்று பௌத்த மத பீடங்களுக்கான மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர். நேற்றுமாலை சந்திப்பொன்றை மேற்கொண்ட அவர்கள், ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது.

தற்போதுள்ள அரசியலமைப்பை அவ்வாறே தொடர்ந்தும் பேணுவது பொருத்தமானது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். எனினும், தேர்தல் முறையை மட்டும் மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.