வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ உதவி வழங்கி வைக்கபட்டுள்ளன
கடந்த கால யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற புன்னைநீராவியடி விசுவமடுவை முகவரியாக கொண்ட சிவஞானம் மயூரன் என்ற முன்னாள் போராளிக்கு அவரின் வாழ்வதாரத்தை உறுதிபடுத்தும் முகமாக ரூபா 40000 பெறுமதியான 100 கோழிகள் மற்றும் பராமரிப்பு தொகையும் கண்ணகிநகர் புன்னை நீராவியடியை முகவரியாக கொண்ட கடந்த கால யுத்தத்தின் போது அங்கவீனமான உதயகுமார் யோகராணி குடும்பத்திற்க்கு மகளின் மருத்துவ செலவிற்க்காக ரூபா 30000 வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினினால் வழங்கி வைக்கபட்டுள்ளதுசிவஞானம் மயூரன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளில் தெரியபடுத்தியதாவது நடந்து முடிந்த இறுதி யுத்தத்தின் போது தனது வலது கால் தொடை பகுதியுடன் இழந்துள்ளதாகவும் தடுப்பு முகாமில் இருந்து வந்து பல துயரங்களின் மத்தியிலும் வயது முதிர்ந்த பெற்றோரை பராமரிக்க பெரும் பாடுபட்டு வந்துள்ளதாகவும். கடந்த 4 மாதங்களுக்கு முன் தனக்கு திருமணம் ஆகியுள்ளதால் தனது வீட்டில் 100 கோழி வளர்க்க கூடிய வசதிகள் இருந்தும் அதற்க்கான ஆரம்ப மூலதனம் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்து தனக்கு இவ் வாழ்வாதார உதவியை செய்து தரும்படி வேண்டியிருந்தார்.
இவரின் கருணை மடலை கருத்தில் கொண்டு இன்று இவரின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யும் முகமாக பிரான்ஸ் நாhட்டில் வசிக்கும் ரவிக்குமார் கிருத்திகா வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக வாழ்வாதார உதவியை முன்வந்து செய்துள்ளனர்.
உதயகுமார் யோகராணி தனது விண்ணப்பத்தில் தெரிவிக்கையில் தனது கணவர் மாற்றுத்திறனாளி என்றும் தனது கை ஒன்று யுத்தத்தின் போது மணிக்கட்டுடன் இழந்துள்ளதாகவும் தமக்கு 3 பிள்ளைகள் உள்ளதாகவும் ழூன்றாவது பிள்ளை 1 வயது இவர் மூளை முடக்குவாத நோயால் பாதிக்கபட்டுள்ளதால் இவரின் மருத்துவ செலவுக்கு போதிய பணம் இன்மையினால் தங்களின் அமைப்பின் உதவிதிட்டத்தின் மூலமாக எனது பிள்ளையின் மருத்துவ செலவிற்க்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டார்.
இவரின் கருணை மடலை கருத்தில் கொண்டு மகளின் மருத்துவ உதவி தொகையை சுவிஸ் நாட்டில் வசிக்கும் தவராஜா புவனேந்திரன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக முன்வந்து செய்துள்ளனர்.