அரசியலமைப்பு நகல் தயாரிக்கப்பட்டதும், முறையாக மகாநாயக்கர்களிடம் இது குறித்து ஆலோசிக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான யோசனைகளையும் கருத்துக்களையும் மகாநாயக்க தேரர்களிடம் பெற்றுக் கொள்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார். கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் மகா நாயக்க தேரர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். Read more