புதிய அரசியலமைப்பில் வடக்கு – கிழக்கு இணைக்கப்படவில்லை எனவும், தற்போது பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மாற்றப்படவில்லை எனவும், அது ஒருபோதும் சமஷ்டி யாப்பு இல்லை எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுமாயின் நாட்டை யாராலும் மீண்டும் காப்பாற்ற இயலாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.