Header image alt text

VM vavunya01

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கௌரவ தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் 16.07.2017(ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 04.30 மணிக்கு வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேசுவரன் நினைவு இல்லத்தில் நடைபெறும். மேற்படி 28ஆவது வீரமக்கள் தினத்தின் அஞ்சலி நிகழ்வு மற்றும் ஏனைய விளையாட்டு, சமூக நிகழ்வுகளில் கழகத்தின் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும். இளைஞரணி ஊடகப் பிரிவு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)

VM 28 vavuniya. Aதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) மறைந்த தோழர்களின் ஞாபகார்த்தமாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF) இளைஞரணியின் ஒழுங்கமைப்பில், நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more

VM 28 vavuniya Bதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) மறைந்த தோழர்களின் ஞாபகார்த்தமாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF) இளைஞரணியின் ஒழுங்கமைப்பில், நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில். உயிர் காக்கும் உன்னத பணியான இரத்த தான முகாம் 16.07.2017 அன்று காலை 08.00 மணிமுதல் மாலை 02.00 மணி வரை வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் (கச்சேரி முன்பாக) ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இரத்த தான முகாமில் பங்கு பற்ற விரும்பியவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் செயலாளர் ஸ்ரீ.கேசவன்(0775058672), பொருளாளர் வி.சஜீவ்நாத்(0774154631), அமைப்பாளர் வ.பிரதீபன்(0770779434), உப தலைவர் பி.கெர்சோன்(0767096654) ஆகியோருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

VM 28 vavuniya.Cதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) மறைந்த தோழர்களின் ஞாபகார்த்தமாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF) இளைஞரணியின் ஒழுங்கமைப்பில், நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் சமூக நிகழ்வுகளின் வரிசையில் பாத்தீனியம் ஒழிப்பு சிரமதான பணி 15.07.2017 அன்று காலை 08.00 மணிக்கு தோழர் க.உமாமகேசுவரன் இல்லத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறும்.