தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) மறைந்த தோழர்களின் ஞாபகார்த்தமாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF) இளைஞரணியின் ஒழுங்கமைப்பில், நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில். உயிர் காக்கும் உன்னத பணியான இரத்த தான முகாம் 16.07.2017 அன்று காலை 08.00 மணிமுதல் மாலை 02.00 மணி வரை வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் (கச்சேரி முன்பாக) ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இரத்த தான முகாமில் பங்கு பற்ற விரும்பியவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் செயலாளர் ஸ்ரீ.கேசவன்(0775058672), பொருளாளர் வி.சஜீவ்நாத்(0774154631), அமைப்பாளர் வ.பிரதீபன்(0770779434), உப தலைவர் பி.கெர்சோன்(0767096654) ஆகியோருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.