VM 28 vavuniya. Aதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) மறைந்த தோழர்களின் ஞாபகார்த்தமாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF) இளைஞரணியின் ஒழுங்கமைப்பில், நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவர் அமரர் தோழர் நா.மாணிக்கதாசன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான அணிக்கு 07 பேர் கொண்ட கால்பந்தாட்ட திறந்த சுற்றுப் போட்டி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. கால் பந்தாட்ட சுற்றுப் போட்டியில் விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள், பாடசாலை அணிகள், மற்றும் திணைக்கள அணிகள் என அணிக்கு 07 பேர் கொண்ட திறந்த சுற்றுப்போட்டியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் பங்கு பற்ற விரும்பிய அணிகள் 10.07.2017 ம் திகதிக்கு முன்னதாக பதிவுகளை மேற்கொள்ள முடியும். பாடசாலை அணிகளுக்கு பதிவுக் கட்டணம் இலவசம் என்பதுடன் ஏனைய அணிகளுக்கு பதிவுக்கட்டணம் 1000/- ரூபா ஆகும்.

அத்துடன் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தோழர் ச.சண்முகநாதன்(வசந்தன்) ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கால் பந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு 13.07.2017 அன்று மாலை 03.30 மணிக்கு நெளுக்குளம் ஊர்மிளா கோட்டம் நியூ பைட் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். மேற்படி நிகழ்வுகள் தொடர்பாக பதிவுகளுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணி செயலாளர் சு.காண்டீபன் (0763806990) அல்லது நியூ பைட் விளையாட்டுக் கழக தலைவர் ஏ.ஜோன்சன் (776152097) ஆகியோருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.