கிளிநொச்சியைச் சேர்ந்த அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக, லண்டனில் வதியும் அன்னாரின் புத்திரரான தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வறுமைக்கோட்டின் கீழான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்தவகையில் முதற்கட்டமாக முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையில் கல்விபயிலும் 50 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்களும், இருவருக்கு துவிச்சக்கர வண்டியும் நேற்று (11.07.2017)வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளரும், வட மாகாணசபை உறுப்பினருமான கந்தையா சிவநேசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர்கள் மகேந்திரன்(ராஜா), சிவபாலசுப்பிரமணியம்(மணியண்ணன்), க.தவராஜா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பிரமுகர் யசோதரன் ஆகியோரும், கிராம சேவையாளர், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.