மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல்வாதிகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மையே எலையடநனெசயமொவட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பின் செல்வதற்கு காரணமாகும்.
இது ஒரு சாபக்கேடாகவே இருந்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (09.07.17) மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,கடந்த நான்காம் திகதியில் இருந்து ஏழாம் திகதி வரையில் பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்றது.
அந்தவேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் ஒன்று கூடி பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசினோம்.
இது வழமையான ஒரு நடவடிக்கையாகும். இந்த வேளையில் கடந்த வியாழக்கிழமை அந்த கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சில இணையத்தளங்களிலும் முகப்புத்தகத்திலும் சம்பந்தனை காட்டிக்கொடுத்த வியாழேந்திரன் எம்.பி.என்று செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
நான் தேசத் துரோகம் செய்தது போன்று அந்த செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றுவது தொடர்பில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதன்போது பாராளுமன்ற உறுப்பினராகிய நான் அரசாங்க அதிபரை மட்டுமல்ல சில பிரதேச செயலாளர்களையும் இடமாற்றவேண்டும் என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபருக்கு உடனடியாக தகவல் பரிமாறியதாகவும் உடனடியாக அவர் ரவூப் ஹக்கீமை தொடர்பு கொண்டதாகவும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இது முற்று முழுதான பொய்யான செய்தி என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.