Veeramakkal 17.இன்றையதினம் யூலை 13ம் வீரமக்கள் தினம் ஆரம்பமாகி எதிர்வரும் யூலை16ம் திகதி நிறைவுபெறுகின்றது.

1989ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் செயலரும், இலங்கை பாராளுமன்றத்தின் முதல் தமிழ் எதிர்கட்சி தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட நாளான இன்றைய யூலை 13ம் திகதியில் இருந்து, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் செயலதிபரும் மக்கள் இயக்கத்தின் மகத்தான தளபதியுமான தோழர் அமரர். கதிர்காமர் உமாமகேஸ்வரன்(முகுந்தன்) படுகொலை செய்யப்பட்ட யூலை16ம் திகதி வரையிலான பகுதியே வீரமக்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.VM vavunya01விடுதலை போராட்டத்தில் பலியான தலைவர்கள், தளபதிகள்,போராளிகள், பொதுமக்கள் என அனைவரையும் நினைவுகூரும் நிகழ்வாக இடம்பெற்று வருகின்றது. இன்று தொடக்கம் அடுத்துவரும் 3 நாட்களும் இரத்ததானம், சிரமதானம், கல்வி ஊக்குவிப்பு, வாழ்வாதார உதவிகள் உதைபந்தாட்ட, கரைப்பந்தாட்ட போட்டி நிகழ்வுகள் என இடம்பெறும்.

இறுதி நாளான யூலை 16ம் திகதி வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள உமா இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று மாலையில் மாணவர்களிற்கான வாழ்வாதார உதவிகளும் இடம்பெற்று அஞ்சலி கூட்டத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெறும்.

இந் நிகழ்வினை புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இளைஞர்அணிகள் முன்னெடுத்து செல்லகின்றன.