13.07 (23)28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றியமைக்காக 8,000 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (13.07.2017) வியாழக்கிழமை யாழ். சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. விக்டோரியக் கல்லூரியின் அதிபர் திருமதி எஸ்.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலராஞ்சலி செலுத்தி மௌன அஞ்சலி இடம்பெற்றது.

தொடர்ந்து மாணவ, மாணவியர்க்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கௌரிகாந்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்,

வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி ஜங்கரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நோர்வே நாட்டு பிரதிநிதி திரு. சி.ராஜன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், பிரதேச இணைப்பாளருமான திரு. அ.கௌதமன், முன்னாள் கிராம சேவையாளர் ஞானசபேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

13.07 (1) 13.07 (2) 13.07 (3) 13.07 (4) 13.07 (5) 13.07 (6) 13.07 (7) 13.07 (8) 13.07 (9) 13.07 (10) 13.07 (11) 13.07 (12) 13.07 (13) 13.07 (14) 13.07 (15) 13.07 (16) 13.07 (18) 13.07 (19) 13.07 (20) 13.07 (21) 13.07 (22) 13.07 (23) 13.07 (25) 13.07 (26) 13.07 (27) 13.07 (28) 13.07 (29) 13.07 (30) 13.07 (31) 13.07 (32) 13.07 (33) 13.07 (34)