28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மறைந்த முன்னாள்; எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக அணிக்கு 6 வீரர்கள் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப் போட்டி யாழ்ப்பாணக் கல்லுரியின் தொழில்நுட்ப நிலையத்தின் மைதானத்தில் நடைபெற்றது.
புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், இணைப்பாளருமாகிய அ.கௌதமன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பின் பா.கஜதீபன் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் சங்கானைக் கல்விக் கோட்டப் பணிப்பாளர், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி ஜங்கரன், யாழ்ப்பாண கல்லுரி தொழில்நுட்ப நிலையத்தின் இயக்குனர் திரு.போல், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நோர்வே நாட்டு பிரதிநிதி திரு சி.ராஜன் அவர்களும், கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.