28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு தேசிய விடுதலை போராட்டத்தினால் வலுவிழந்த குடும்பங்கள், மாணவர்களிற்கான உதவி அமரர் தோழர் உமாமகேஸ்வரன் நினைவாக “உமா” உதவித் திட்டம் எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு இவ் உதவி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கனடா கிளையினால் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றையதினம் வவுனியா கோயில்குளம் உமா இல்லத்தில் இடம்பெறும் “வீரமக்கள்” தினத்தில் வைத்து இவ் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இன்றையதினம் மாலை இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளை தொடர்ந்து இந்த வாழ்வாதார உதவிகள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF-Canada…) கனடா கிளையின் சிரேஸ்ட்ட உறுப்பினரும் பொருளாளருமான தோழர் சாள்ஸ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. Read more