20170716_09105028ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று (16.07.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.20170716_091136 20170716_091215 20170716_091224 20170716_091343 20170716_091415 20170716_091619 20170716_091619- 20170716_091758 20170716_091816 20170716_091824 20170716_091830 20170716_091840 20170716_091920 20170716_091930 20170716_091946 20170716_091956 20170716_092028 20170716_092831 20170716_092851 20170716_092906 20170716_092919 20170716_092944 20170716_093049