28வது வீரமக்கள் தின நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர் அ.அமிர்தலிங்கம்,
கழகக் கண்மணிகள் மற்றும் போராளிகளினதும் உருவப்படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. பிரான்ஸ் வீரமக்கள் தின நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்களது குடும்பத்தார், உயர்நீத்தோர் உறவுகள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.