வீரமக்கள் தின நிகழ்வுகள் நேற்று (15.07.2017) சனிக்கிழமை முற்பகல் 10மணியளவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரன், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம்,
கழகத்தின் செயற்குழு உறுப்பினர் பொ.கேசவன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர்கள் ம.நிஸ்காந்தராஜா, என்.ராகவன், கே.கமலநாதன், எஸ்.ஜெயமுரளி ஆகியோரும், கட்சி உறுப்பினரும், பொறியியலாளருமான ஞானப்பிரகாசம், கட்சி உறுப்பினரும் விரிவுரையாளருமான கலாநிதி யோகன், கட்சி உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி வீரமக்கள் தின நிகழ்வுகளுக்கான முழுமையான அனுசரணையினை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடா கிளை வழங்கியிருந்தது. மேலும் இந்நிகழ்வின்போது கழக அங்கத்தவர்கள் இருவரது குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியினை லண்டனில் வசிக்கும் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் திரு.தர்மலிங்கம் சிவபாலன் அவர்கள் வழங்கியிருந்தார்.