முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு சனசமூகநிலையத்திற்கு புளொட் அமைப்பின் கௌரவ வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் அவர்களால், 2017ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட மூலதன நன்கொடைகள் நிதி பங்களிப்பினூடாக தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்பாக இயங்குகின்றதாக குறிப்பிடக்கூடிய வாசிகசாலையை இச் சனசமூக நிலையம் கொண்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச சபை அதிகாரிகளுடன் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளும் சமுகமளித்திருந்தனர். Read more