வவுனியா மாவட்டத்தின் செட்டிக்குளம் பிரதேசத்தில் வாழ்பவர்களிற்கு புளொட் அமைப்பின் கௌரவ வட மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி. லிங்கநாதன் அவர்களால், 2017ஆம் ஆண்டிற்கான குறித் -தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டிருந்தன.
செட்டிக்குளம் கால்நடை அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில்புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் செட்டிக்குளம் பிரதேசத்தின் இணைப்பாளருமான வே.குகதாசன் அவர்களும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா தெற்குப் பிரதேச இணைப்பாளருமான த. யோகராஜா அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.