முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் அமைந்துள்ள யோகபுரம் ஆலடி பிள்ளையார் கோவில், சிராட்டிகுளம் முத்துமாரியம்மன் கோவில், புத்துவெட்டுவான் சிவன் கோவில் போன்றவற்றிற்கு புளொட் அமைப்பின் கௌரவ வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் அவர்களால் 2017ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட மூலதன நன்கொடைகள் நிதி பங்களிப்பினூடாக நிதி வழங்கப்பட்டிருந்தன. துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக தலைமை அதிகாரி, கணக்காளர் உட்பட்ட செயலக அதிகாரிகளுடன் சமுகபிரதிநிதிகளும் சமுகமளித்திருந்தனர்.