28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி விளையாட்டு விழா 11.07.2017 செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வாக வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா திருமதி மீரா குணசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகரசபை உப தலைவர் க.சந்திரகுலசிங்கம், வவுனியா வடக்கு முன்பள்ளி உதவி கல்விப்பணிப்பாளர் எஸ்.இராஜேஸ்வரன், முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் எஸ்.அருள்வேல்நாயகி மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் மற்றும் உறுப்பினர்களாக பிரதீபன், கரிஸ், நிகேதன் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.