யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு பொலிஸார்மீது இன்றுமாலை 5.10 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிபதி இளஞ்செழியன் தனது வாகனத்தில் யாழ். நல்லூர் கோயில் பின் வீதியில் சென்று கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் ஊடகங்களுக்கு கூறுகையில், குறித்த நபர் எம்மை நெருங்கியபோது எனது மெய் பாதுகாவலரான பொலிஸ் சார்ஜண்ட் துப்பாக்கியை பறிக்க முற்பட்டார். நான் வாகனத்தை விட்டு இறங்கி பிஸ்டலை விடுடா என்று கத்தி ஓடியபோது துப்பாக்கிப் பிரயோகம் சரளமாக மேற்கொள்ளப்பட்டது. இதில் சார்ஜணுக்கு துப்பாக்கிச்சூடு பட்டது. தொடர்ந்து என்னுடைய பக்கம் துப்பாக்கி நபர் திருப்பியபோது பொலிஸ் கான்ஸ்டபிள் உடனடியாக ஓடி என்னை காருக்குள் செல்லுமாறு கூறிவிட்டு குறித்த நபரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். Read more