Header image alt text

d-sithadthan-m-pயாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,

நீதிபதி இளஞ்செழியன் மிக நீண்ட காலமாக எனக்கு நன்கு பரீட்சயமானவர். Read more

2“வீரமக்கள் தின” நிகழ்வானது லண்டன் ஈஸ்ரகாம் ட்ரினிட்டி சென்டரில் ((Trinity Centre, East Avenue, London, E12 6SG) 22.07.2017 ஞாயிற்றுக்கிழமை தோழர் போல் சத்தியநேசன் தலைமையில் நடைபெற்றது. தோழர் நடா மோகன் அவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட மேற்படி நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஷ்ரீபன் பிம்ஸ் அவர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களை நினைவு கூர்ந்து அதுக்குரிய நினைவு தூபியை ஏற்றியதுடன், சிறப்புரையும் ஆற்றியிருந்தார். Read more

youth sports 14வவுனியா மாவட்டத்தின் 29வது விளையாட்டு விழா நிகழ்வுகள் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் 22.07.2017 அன்று காலை 10.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்றது. 

Read more

ertrகறுப்பு யூலையின் 34ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை மாதம் 23ம் திகதியாகிய இன்றையதினம் முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ்மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. Read more

DSCN0502முல்லைத்தீவு குரவில் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புளொட் அமைப்பின் கௌரவ வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் அவர்களால், 2017ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட மூலதன நன்கொடைகள் நிதிப் பங்களிப்பினூடாக ஒலிபெருக்கி கருவி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20.07.2017ல் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், வன்னி மேம்பாட்டுப் பேரவை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.  Read more

sdfdsfdநீதிபதி இளஞ்செழியனுக்கு 18 வருட மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நேற்றுமாலை நடத்தப்பட்ட தாக்குதலின்போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 58 வயதுடைய பொலிஸ் சார்ஜன் ஹேமச்சந்திர என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்றைய தாக்குதலின்போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர்மீது குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்திருந்தனர். உடனடியாக அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தனர். இந்நிலையிலேயே சிகிச்சை பலனின்றி ஒரு மெய்ப்பாதுகாவலர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். வயிற்றில் பலத்த காயமடைந்திருந்த மெய்ப்பாதுகாவலரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.