2“வீரமக்கள் தின” நிகழ்வானது லண்டன் ஈஸ்ரகாம் ட்ரினிட்டி சென்டரில் ((Trinity Centre, East Avenue, London, E12 6SG) 22.07.2017 ஞாயிற்றுக்கிழமை தோழர் போல் சத்தியநேசன் தலைமையில் நடைபெற்றது. தோழர் நடா மோகன் அவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட மேற்படி நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஷ்ரீபன் பிம்ஸ் அவர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களை நினைவு கூர்ந்து அதுக்குரிய நினைவு தூபியை ஏற்றியதுடன், சிறப்புரையும் ஆற்றியிருந்தார்.முதலில் அனைத்து அமைப்புகளில் இருந்தும் மரணித்தோருக்கும், பொதுமக்களுக்குமான நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)இன் பிரித்தானியாக் கிளை பொறுப்பாளரான தோழர் போல் சத்தியநேசன் தலைமை உரையை நிகழ்த்தினார்.  தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்பவற்றின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அனுப்பிவைத்த அறிக்கையினையை தோழர் கேசவன் வாசித்தார். இதனையடுத்து முன்பு “புதிய பாதை” செயற்பாட்டாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த திரு. டாக்ரர் சுரேஷ் சுரேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திரு.கஜேந்திர போஸ், திரு செந்தில்நாதன் உட்பட சிலரும் சிறப்புரை ஆற்றினார்கள்.

31 4567810 111214 1315