வவுனியா மாவட்டத்தின் 29வது விளையாட்டு விழா நிகழ்வுகள் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் 22.07.2017 அன்று காலை 10.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்றது.
29வது இளைஞர் விளையாட்டு விழாவின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு அதிதிகளாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் திரு என்.முனபர் , வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) , வடக்கு மற்றும் வன்னி மாகாண இளைஞர் சேவைகள் மன்றத்தின் கண்காளர் திரு இரட்ணகுமார் ஆகியோர் சிறப்பித்தார்கள்.
கௌரவ அதிதிகளாக வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு எஸ்.ஜெகதீஸ்வரன்(சிவம்), இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் , IAPS அக்கடமியின் பணிப்பாளர், சபரி அச்சக நிறுவன உரிமையாளர் பிரசாத் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஜ.சுகானி மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டதுடன்,
இவ் வருட விளையாட்டு நிகழ்வில் பரிசளிப்பு நிகழ்வு மற்றும் உதைபந்தாட்ட கண்காட்சி போட்டிகள் நடைபெற்றது. கண்காட்சி போட்டியில் 786 இளைஞர் கழகம் எதிர் அல் இக்பால் இளைஞர் கழகங்கள் மோதிக்கொண்டன.
அத்தோடு தடகள மற்றும் பெரு விளையாட்டு விழாக்களின் பரிசளிப்பு நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.