மகிந்த ராஜபக்வின் ஆட்சிக்காலத்தில் நடக்காத விடயங்கள் ஆட்சிமாற்றம் ஒன்று இந்த நாட்டில் ஏற்பட்டால் நடைபெறும் என்ற தீவிரமான நம்பிக்கை கொண்டுதான் தமிழ் மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற விடயத்துக்கு அப்பால் தங்களுடைய சாதாரண பிரச்சினைகளான காணி விடுவிப்பு, கைதிகளின் விடுதலை, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான நீதி, வேலைவாய்ப்பு போன்ற விடயங்களிலாவது ஆட்சி மாற்றம் ஒரு சாதகமான தீர்வை பெற்றுத்தரும் என்று தமிழ் மக்கள் நம்பினார்கள். ஆனால்