05யாழ்ப்பாணம் சங்குவேலி விநாயகர் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி நிகழ்வானது 22.07.2017 சனிக்கிழமை ஆசிரியர் தே.திருமுருகராஜன் (ஜே.பி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டிருந்ததோடு, விசேட அதிதிகளாக ஜி.எ.இசட் இணைப்பாளர் ஆ.சிவானந்தன், கிராம அலுவலர் ஆ.ரஜீவன், சமூக சேவகர் கெங்காதரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதையடுத்து விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியில் முன்பள்ளிச் சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

01 02 04 06 07 08 09 10