26 (4)யாழ். நல்லூரில் வைத்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்மீது கடந்த சனிக்கிழமை நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகள் இன்றுமாலை அவரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இடம்பெற்றன.

உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் பூதவுடலுக்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண நீதிபதிகள், வட மாகாண சட்டத்தரணிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதோடு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் சிலாபம் குமாரகட்டுவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
26 (3) 26 (4) 26 (6) 26 (8) 26 (10) 26 (11) 26 (13) 26 (14) 26 (15) 26 (16) 26 (17) 26 (18) 26 (19) 26 (20) 26 (21) 26 (22) 26 (23) 26 (25)