sdfsdfஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நீக்கப்பட்டுள்ளது. 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2009ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அந்த இயத்தினால் எவ்வித தாக்குதல் அச்சுறுத்தல்களும் ஏற்படுவதற்கான ஆதாரங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்படவில்லை என ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக முடக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதியை விடுவிப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.எனினும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தை தொடர்ந்தும் தமது பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடக்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை 2006ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் தமது பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உள்ளடக்கியிருந்தது.