Header image alt text

daqwபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்ததையடுத்து அவர் பாகிஸ்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நவாஸ் ஷெரீப் ஆதாயம் பெற்றுள்ளதால் அவர் குற்றவாளி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனால், பிரதமர் பதவியிலிருந்து அவரை தகுதி நீக்கம் செய்வதாகவும், நவாஸ் ஷெரீப் மீது வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கை தேசிய நம்பகத்தன்மை குழு விசாரணை செய்து 6 வாரத்திற்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். Read more

newshyujkயாழ். காரைநகர் கடற்பரப்பில் இன்று ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காரைநகர் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த ஆண் யார் என அடையாளம் காணப்படவில்லை.

இதேவேளை மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரத்தில் கைவிடப்பட்ட பற்றைக் காணியினுள் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலத்தினை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜ.பி.ரவிச்சந்திரன் தெரிவித்தார். Read more

dsdஇலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹெஸ் பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இருவருக்குமிடையில் இருதரப்பு விடயங்கள் தொடர்பாக சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டி ஏஆர் ரணவக்கவும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

a3வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முள்ளியவளை பாரதி இல்ல பிள்ளைகளுக்கு 108 பாதணிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. லண்டனைச் சேர்ந்த கஸ்தூரி அவர்களின் நிதி அனுசரணை மூலம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையை இழந்த பிள்ளைகள் வாழும் முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள பாரதி இல்ல 108 பெண் பிள்ளைகளுக்கான பாதணிகள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. Read more

swordவாள்வெட்டுக்கு இலக்காகி விரல் துண்டிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புலோலி பகுதியைச் சேர்ந்த தினேஸ்குமார் சலோஜிதன் (வயது 18) என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். திருநெல்வேலி கலட்டிச் சந்தியில் நேற்றுமாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வேலைக்காக வந்த குறித்த இளைஞரின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் வாளால் வெட்டியுள்ளனர். வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் பொது மக்களினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

dssdவவுனியாவில் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக நேற்றுமாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பாரதிபுரம் பகுதியில் பொருத்து வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 20பேருக்கு பொருத்து வீடு வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பொருத்துவீடு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பெயர் விபரங்கள் நேற்று வெளியாகியுள்ளன. இதையடுத்து அப்பகுதி மக்களிடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. Read more